
'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியை சிறப்பாக தயாரிக்கும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ
தொலைக்காட்சி நேயர்களுக்கிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் ‘குக் வித்
கோமாளி சீசன் 5.’ இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.
இந்நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்பவர் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ். வி.டி.வி. கணேஷ் போன்ற திரைப்பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகர் விஜய் சேதுபதி.
அவர் தனது 50-ஆவது படமான ‘மகாராஜா’ படத்தின் வெற்றியை ‘குக் வித் கோமாளி சீசன் 5 குழுவினரோடு கொண்டாடியதும், தானே ஒரு பங்கேற்பாளராக மாறி அனைவருடனும் இயல்பாக உரையாடி மகிழ்ந்ததும் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தன.





No comment yet, add your voice below!